புதிய அரசமைப்பு, ஐ.நா. தீர்மானம், மீள்குடியேற்றம் காணாமல்போனோர் தொடர்பாக மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி உட்பட நிகழ்கால விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான முக்கிய கலந்துரையாடல் இன்று கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.
எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் கூட்டமைப்பின் சகல உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும், ஒருங்கிணைந்த இந்தக் கூட்டம் இன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில்இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் கூட்டமைப்பின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.