இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் விளையாடி ய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா தொடரை 4-0 என கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார்.
அதன்படி அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது. தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ஞ், வார்னர் களமிறங்கினர். பின்ஞ் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு வந்த அணித்தலைவர் ஸ்மித் 28 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, பெய்லி 6 ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
நிதானமாக ஆடிய வார்னர் அரைசதம் கடந்தார். ஷான் மார்ஷ் (7) நிலைக்கவில்லை.
23.1 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 121 ஓட்டங்களை குவித்துள்ளது. வார்னர் (101), மிட்செல் மார்ஷ் (48) ஆட்டமிழக்காமல் உள்ளனர்.