
Whats App இல் விரைவில் “Video Calling” வசதி அறிமுகம்
பரிசோதனை அளவில் மட்டுமே இருந்த வட்ஸ் அப்பின்(Whats App) வீடியோ கோலிங் வசதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த இணையத்தளத்தில் வெளியாகியுள்ள சில படங்கள் மூலம் வட்ஸ்அப்பில் (Whats App)வீடியோ கோலிங் வசதி வெளியிடப்பட்ட தகவல் தெரியவந்துள்ளது. வேட்ஸ்அப்பின் புதிய பதிப்பை (v2.12.16.2) பயன்படுத்தும் சில ஐ.ஒ.எஸ். வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வீடியோ கோலிங் கிடைத்துள்ளது.
தற்போது வெளிவந்துள்ள படங்களில் இடது பக்கம் மியூட் பட்டனும், நடுவில் அழைப்பினை துண்டிக்கும் பட்டனும், வலது ஓரம் கேமராவிற்கு செல்லும் பட்டனும் உள்ளது.
எனவே, விரைவில் அப்பிள் தொலைபேசியை பயன்படுத்துபவர்களுக்கு வட்ஸ்அப் வீடியோ கோலிங் வசதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அண்ட்ரோய்ட் பயனாளர்கள் சிறிது காலம் காத்திருக்க நேரிடலாம்.
வட்ஸ் அப்பில் வீடியோ கோலிங் வசதியானது அப்பிளின் பேஸ்டைம் அப்ளிகேஷனுக்கு போட்டியாக கொண்டுவரப்பட்டுள்ளது.
