பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடுகிறது.
இன்று 12 வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தொடர்பில் விவாதம் நடத்தப்பட இருப்பதோடு நாளை நிதிச் சட்டமூலங்கள் மீதான விவாதம் நடத்தப்படும் என பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்தார்.
பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் வியாழனன்று நடைபெறும். அதே வேளை அனுதாபப் பிரேரணை மீதான விவாதம் வௌ்ளியன்று இடம்பெற இருக்கிறது.
இதேவேளை, பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவது தொடர்பான விவாதம் இந்த வாரம் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட போதும் கட்சித் தலைவர் கூட்டத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் இந்தக் குறித்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.