வெலிக்கடைச்சிறை மற்றும் வெலிக்கடை வைத்தியசாலையின் மேலதிகாரியான அனுர ஏக்கநாயக்க அவர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு ஏக்கநாயக்க அவர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டமையாது, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு விஷேட சலுகைகள் வழங்கப்பட்டமை என கதைகள் பரவி வருகின்றது.
ஞானசார தேரரை முதலில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதற்கு, முதலில் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கும் பின்பு தேரர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதுஎவ்வாறாயினும், தற்போது ஏக்கநாயக அவர்கள் சிறைச்சாலை தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.