மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது

மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது. மரணமே இறுதியானது என இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”நான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை.

அதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு கணணி போலத்தான் நமது மூளையும்.

எப்படி கணணியில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் கணணி செயலிழந்து விடுமோ அதுபோலத்தான் மூளையும்.

மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும்.

அதன் பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான் இறுதியானது. மரணத்திற்கு பிறகு சொர்க்கமோ, நகரமோ கிடையாது.

அதேபோல், மறுபிறவியும் கிடையாது. மரணத்திற்கு பிறகு வாழ்க்கை என்பது கற்பனையானது. அது மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள்.

நான் கடந்த 49 ஆண்டுகளாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. அதேநேரத்தில், இறப்பதற்கும் அவசரப்படவில்லை” என்றார்.