
சோபித தேரரின் சிலை நாடாளுமன்றிற்கு அருகாமையில் நிர்மானிக்க நடவடிக்கை
கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் முன்னாள் விஹாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் முன்னாள் அமைப்பாளருமான மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் சிலை நாடாளுமன்றிற்கு அருகாமையில் நிர்மானிக்கப்பட உள்ளது.
நாடாளுமன்றிற்கு அருகாமையில் இந்த சிலையை நிர்மானிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கலாநிதி இத்தாபானே தம்மாலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் வழிகாட்டல்களின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக மத்துகம பிரதேசத்தில் தனிப்பட்ட செலவில் நிறுவுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோட்டே ஸ்ரீ நாக விஹாரையில் அருங்காட்சியகமொன்றும் சிலையொன்றும் உருவாக்கப்பட உள்ளதாக தம்மாலங்கார மேலும் தெரிவித்துள்ளார்.
கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதியாக களனி சொரத தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.