ஜூன் 01 – உலகளாவிய பெற்றோர் தினம்

ஒவ்வொரு ஆண்டுக்குமான  உலகளாவிய ரீதியாக பெற்றோரை கௌரவிக்கும்  தினமாக ஜூன் 01 கொண்டாடப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. 2012ல் இந்த நாள் இந்த நாள் ஐக்கிய நாடுகள் பொது சபை,  A/RES/66/292 எனும் சாசனத்தின் கீழ் உலகம் முழுவதும் பெற்றோரினை  கௌரவிக்கும் நாளாக இந்நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள அனைத்து பெற்றோருக்கும்  விஷேட நாளாய் கருதப்படும் இந்நாளில் தமக்காய் பெற்றோர் பட்ட துன்பங்களையும், தன்னில் காட்டிய அக்கறைக்கும் ஈடு செய்ய  முடியாத அன்பின் சிகரமாய் விளங்கும் பெற்றோரின் அர்ப்பணிப்பினை பாராட்டுவதற்காய்  ஒவ்வொரு பிள்ளைச் செல்வத்திற்கும் கிடைக்கப்பெற்ற ஒரு அரும் வாய்ப்பு எனலாம்.

ஐக்கிய நாடுகள் உறுப்பு நாடுகளின் சாசனத்தால்  பெற்றோர்களின் பங்கு அடையாளப்படுத்தி முழு சமூகத்தின் ஆதரவுடன் இந்த நாளைக் கொண்டாட, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நாம் நினைவூட்டுகின்றோம்..