டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு

டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான வங்கதேச அணியில் நஷீர் ஹொசைன், முகமது மிதுன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

6வது டி 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 8ம் திகதி இந்தியாவில் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வங்கதேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

அணி விவரம்:

மோர்டஸா(அணித்தலைவர்), ஷாகிப் அல்-ஹசன், தமிம் இக்பால், முகமது மிதுன், மஹ்மதுல்லா, முஷ்பிகுர் ரஹிம், சவுமியா சர்க்கார், ஷபீர் ரகுமான், நஷீர் ஹொசைன், முஸ்டாபிஜூர் ரகுமான், அல்-அமீன் ஹொசைன், தஸ்கின் அகமது, அரபாத் ஷன்னி, அபு ஹைதர், நுருல் ஹசன்.