குமார் குணரத்னத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியற் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம், இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, நாட்டில் தங்கியிருந்த குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இவர், கேகாலை, அருகுருவெல பகுதியில் வைத்து நவம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.