ஆஸ்திரேலியா–நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹேமில்டனில் இன்று நடந்தது. நாணயச்சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 246 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக குப்தில் 59 ரன்கள் எடுத்தார். எல்லியாட் 50 ரன்களும், மெக்கல்லம் 47 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டும், ஹாஸ்டிங், ஹாசில்வுட், போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இதையடுத்து 247 ரன் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா நிதானமாக ஆடியது. அதேசமயம் அவர்களின் ரன் ரேட்டை அதிகரிக்க விடாமல் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். துவக்க வீரர் வார்னர் 16 ரன்களும், மற்றொரு துவக்க வீரர் கவாஜா 44 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். கெப்டன் ஸ்மித் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார், பெய்லி (33), மார்ஷ் (41) தவிர மற்ற வீரர்கள் விரைவில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால், அந்த அணி 43.4 ஓவர்களில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, போட்டித் தொடரையும் 2-1 என கைப்பற்றியது. முன்னணி பேட்ஸ்மேன்கள் இருவரை அடுத்தடுத்து அவுட் ஆக்கிய சோதி ஆட்டநாயகன் விருது பெற்றார்.