மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கொழும்பில் பாரிய வாகன நெரிசல்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பு மின்சார சபை தலைமையகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி, விஹாரமகாதேவி பூங்காவை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்காலிக அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும், மின்சார சபை ஊழியர்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியினால் கொம்பனித்தெரு, யூனியன் பிளேஸ் உள்ளிட்ட பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.