எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்படாது – அரசு திட்டவட்டம்

எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
உலக சந்தையில் பாரியளவில் எரிபொருளுக்கான விலைகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் அதன் நன்மைகள் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

எரிபொருள் விலை தொடர்பில் விலைப் பொறிமுறைமை உருவாக்கப்படும் என அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.

எனினும் நாட்டின் மோசமான பொருளாதார நிலைமை காரணமாக எரிபொருளுக்கான விலைகளை குறைக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நிலைமைகள் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்நோக்கியுள்ள நட்டம் காரணமாக இவ்வாறு எரிபொருளின் விலைகளை மேலும் குறைக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.