அனுஷ்கா சர்மா காதல் உறவு முறிவு

காதலர்களாக வலம் வந்த இந்திய கிரிக்கெட் அணியின் வீரர், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இடையேயான காதல் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அணியின் தலைவர் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் இரண்டு வருடமாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் விராட் கோலி விளையாடும் போட்டிகளின் போது அனுஷ்கா சர்மா மைதானத்துக்கு வருவதால், கோலிக்கு கவன சிதைவு ஏற்பட்டு, சீக்கிரத்திலேயே ஆட்டம் இழப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் கோலி சீக்கிரமே ஆட்டம் இழக்க, சமூக வலைதளங்களில் இருவரையும் கேலி செய்து பல படங்கள் வெளியிட்டன.

எனினும், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தை காண்பதற்காக கோலியும், அனுக்ஷாவும் ஜோடியாகவே வந்திருந்தனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணம் செய்து கொள்வது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக, இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

அனுஷ்கா சர்மா திருமணத்தை வலியுறுத்தும் நிலையில், கோலி மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் அவரவர் பணிகளில் தீவிர கவனம் செலுத்தும் வகையில் பிரிந்து விடுவது என தீர்மானித்துள்ளனர்.