முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் ஒன்று நாளைய தினம் பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் திறந்து வைக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்தில் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஆரம்பிக்க உள்ள புதிய கட்சி தொடர்பான இறுதி பேச்சுவார்த்தை கடந்த 8 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மிரிஹானவில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தையில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
புதிய கட்சியை இரண்டு வாரங்களுக்குள் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.