மும்பை பொலிஸார் குரங்கு ஒன்றை கைது செய்துள்ளனர்.
மும்பையின் மத்திய பகுதியில் உள்ள குடியிருப்புகள், அலுவலகங்கள், பூங்கா மற்றும் உணவு விடுதிகளில் கடந்த 6 மாதங்களாக குரங்குகள் அட்டகாசம் செய்து வந்துள்ளன.
உணவைத் திருடித் திண்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்த குரங்குகளைப் பிடிக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், அவற்றைப் பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், குரங்குகளில் ஒன்று மட்டும் தனியாக வந்த போது, அதை குரங்கு பிடிக்கும் நபர் மூலம் லாவகமாகப் பிடித்த பொலிஸார், அதன் கை கால்களை கயிற்றால் கட்டி வைத்து, கூண்டு ஒன்றுக்குள் அடைத்தனர்.
பின்பு, அதனை வனப்பகுதியில் விட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.