ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க உடன் நடவடிக்கை வேண்டும். அவ்வாறில்லாவிடின் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய கட்சியொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஸ்ரீ.ல.சு.க. யின் உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகள் பெரும்பாலானோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீர்கொழும்பு ரெநோவில் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ.ல.சு.க.யின் உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் நாடுபூராகவும் ௦௪ உருப்பினர்களைத்தவிர ஏனைய அனைபேரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஸ்ரீ .ல.சு.க.யின் தலைமைப் பதவியை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கிவிட்டு ஜனாதிபதி மைத்திரிபால நடுநிலைமை வகிக்க வேண்டும்.
இவ்வாறு நடைபெறுமானால் கட்சியிலுள்ள சகலரின் ஒத்துழைப்பும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைக்கப் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.