பணச் சலவை செய்த குற்றச்சாட்டின் பேரில் யோசித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ரகர் போட்டியொன்று நேற்று நடைபெற்ற போது, கடற்படை அணியை பிரதிநிதித்துவம் செய்த நான்கு வீரர்கள் யோ007 என்ற பட்டியொன்றை கைகளில் காட்சியப்படுத்தியவாறு விளையாடியிருந்தனர்.
இவ்வாறு விளையாடிய நான்கு வீரர்களின் பணியும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளார் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
இவர்கள் கடற்படை ரகர் குழாமிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறெனினும், நேற்று நடைபெற்ற போட்டியில் கடற்படை அணி இராணுவ அணியை வீழ்த்தி வெற்றியீட்டியிருந்தது.
யோசித ராஜபக்ஸ இலங்கைக் கடற்படை ரகர் அணியின் தலைவராக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைப்பட்டி குறித்து கடற்படை வீரர்கள் நால்வரிடமும் விசாரணை
கடற்படை மற்றும் இராணுவ அணிகளுக்கிடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ரக்பி விளையாட்டு போட்டியின் போது கடற்படை வீரர்கள் நால்வர் யோஷித ராஜபக்ஷவிற்கு ஆதரவாக கைப்பட்டி கட்டியிருந்தமை தொடர்பில் விசாரிக்க உள்ளதாக கடற்படைப் பேச்சாளர் அகரம் அலவி தெரிவித்துள்ளார்.