2009–ம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதன் பின் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாட மற்ற நாடுகள் தயக்கம் காட்டின.
தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
2–வது ஒருநாள் போட்டியின் போது மைதானம் அருகே தற்கொலை தாக்குதல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் கிரிக்கெட் வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் ‘பாகிஸ்தானில் வெளிநாட்டு அணிகள் சுற்றுப்பயணம் செய்து விளையாட வேண்டும்’ என்று ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கெப்டன் மிஸ்பா–உல்–ஹக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்;
ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் விளையாடி வருகிறது. இது அனைத்து நாடுகளுக்கும் அனுப்பப்படும் தகவலாக கருதுகிறேன். கிரிக்கெட்டில் இருந்து பாகிஸ்தான் நாட்டை பிரிக்க முடியாது. மக்கள் இன்னும் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள்.
6 ஆண்டுகளுக்குப் பிறகும் மைதானம் நிரம்பி வழிகிறது. கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு நாடும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். இது பாகிஸ்தானுக்கு பயனுள்ளதாக இருக்கும், எனவும் கூறினார்.