தேசிய ரீதியில் மிகச்சிறந்த பங்களிப்புகளை வழங்கும் குவைத் எயார் வேஸ் புதிதான பல அபிவிருத்தி திட்டங்களை Boeing 777 விமானத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தவகையில் குறித்த விமானத்தில் பயணிகளின் நலன்கருதி முதலாம் வகுப்பு அறைகளை உருவாக்கியுள்ளது. இதனடிப்படையில் அடுக்குமுறைசார் திட்டங்களின்படியும், பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதியும், வசதிவாய்ப்புகளுடன் கூடிய வகையில் மேற்குறித்த வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நியூயோர்க்கிலிருந்து லண்டனுக்கு செல்லும் விமான சேவையினூடாக குறித்த விசேட சேவை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.