வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக புறக்கோட்டை ஓல்கொட் மாவத்தையில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வேலையில்லாப் பட்டாதாரிகள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது, கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டத்துக்கு அண்மையில் வைத்து பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப்பிரயோகம் செய்துள்ளனர்.