யார் இந்த தங்க மகன்… தமிழனா..??

யார் இந்த சங்கக்கார..??

இவன் ஒரு தமிழனா…??

இவன் ஒரு நடிகனா….??

இவன் ஒரு அரசியல்வாதியா..??

இவன் ஒரு இந்தியனா..??

இவன் தமிழக மக்களிடத்தில் ஏதும் தேவையுடையவனா..??

இவன் யாருமில்லை..

மதங்களைக் கடந்து மனிதநேயத்தை நேசிக்கத் தெரிந்த ஓர் சாதாரண மனிதன்…

சிங்கள ஆட்சியின் கீழே ஓர் சிங்களவனாய் இருந்து கொண்டே தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்ததோர் தந்தைக்குப் பிறந்த தங்க மகன் இவன்.
யார் இந்த சங்கக்காரா…..?

விளையாட்டு வீரனாய் தான் உங்கள் எல்லோருக்கும் தெரிந்து இருப்பீங்க

ஒரு நல்ல மனிதனாய் எத்தனை பேருக்கு தெரியும் ??

விடுதலை புலிகள் தீவிரவாதிகள் அல்ல என்று நீதிமன்ற வாசலிலே பேட்டியளித்தவர்..

ஈழத் தமிழர்கள் கொடுமைக்கு உள்ளாகும் போது தனது வீட்டில் சில தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் சங்கக்காரா..

குமார் சங்கக்காரா அவர்கள் தமிழ் மக்களுக்காக ரூபாய் 6 லட்சம் (10000டொலர்) வழங்கி உள்ளார்..

தந்தையார் திரு.சொர்ணகுமாரா.

இரத்தம் அப்புடிதான் இருக்கும்..

திரு.சொர்ணகுமாரா அவர்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்காக சிறை சென்ற ஒரு மாமனிதர்..

ஆயிரம் அரசியல் அழுத்தங்கள் வந்தபோதும் கூட, அநீதிக்குத் தலை வணங்காத தர்மத் தாயின் புதல்வன் இவன்.

விளையாட்டிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி கரை படியாத கரங்களுக்கு சொந்தக்காரன் இவன்..
அபாரமான சாதனைகள் செய்தும் கூட அமைதியின் இலக்கணமாய்த் திகழும் அற்புத மனம் படைத்தவன் இவன்..

தன் பிறந்த நாளை திருவிழாவைப் போல் கொண்டாடிக் கழிக்கின்ற சக வீரர்களுக்கு மத்தியில் தானும் இரத்த தானம் செய்து, தன் ரசிகனையும் இரத்த தானம் செய்யச் சொன்ன உத்தமன் இவன்..

இலங்கை வீரர்கள் சென்னை மண்ணை மிதித்தால் கல்லால் அடிப்போம் என்று சொன்ன பரந்த மனம் படைத்த மக்களின் முன்னால்,
இன்னார் செய்தாரை ஒருத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற வல்லுவன் வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவன் இவன்..

பாடசாலை மாணவர் தொடக்கம், பாமர மக்கள் வரை ஆயிரம் உதவிகள் செய்தும் தன்னை அடையாளம் காட்ட நினைக்காதவன் இவன்..

நான் சிங்களவன்,
நான் தமிழன்,
நான் முஸ்லிம்,
நான் கிரிஸ்தவன்,
நான் மலாயன், என்று சொல்வதை விட நான் ஓர் இலங்கையன் என்று சொல்வதில் எப்போதுமே பெருமைப்படுகின்ற தேசப் பற்றாளன் இவன்..

அனைத்துக்கும் மேலே தாயகத்தை நேசிக்கின்ற ஒவ்வொரு இலங்கையரின் இதயங்களில் வாழும் எங்கள் அன்பான அண்ணன் இவன்..

நாங்கள் குமார் சங்கக்கார என்ற கிரிக்கட் வீரனின் ரசிகர்கள் மட்டுமல்ல..

குமார் சங்கக்கார என்ற நல்ல மனிதனின் ரசிகர்களும் கூட….