விஜய் வருடந்தோறும் படிக்க வசதியற்ற ஏழை மாணவ–மாணவிகளை தேர்வு செய்து கல்வி உதவிகள் வழங்கி வருகிறார்.
25 ஏழை மாணவ–மாணவிகளை படிக்க வைக்கிறார். அவர்களின் கல்வி கட்டண செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்கிறார்.
அத்துடன் வருடம் தோறும் தமிழகம் முழுவதும் உள்ள ஏழை மாணவ– மாணவிகளை தேர்வு செய்து நோட்டு புத்தகங்கள் வழங்குகின்றாராம்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் 5 லட்சம் ஏழை மாணவ– மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார்.
இந்த நோட்டு புத்தகங்கள் அனைத்தையும் வேன்களில் ஏற்றி அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார்.
விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மூலம் மாணவ–மாணவிகளுக்கு இவை விநியோகம் செய்யப்படவுள்ளன.
விஜய் தற்போது ‘புலி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருக்கிறார். மெகா பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளனர்.
இப்படத்தில் நாயகிகளாக சுருதிஹாசன், ஹன்சிகா நடிக்கிறார்கள். முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவியும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சிம்புதேவன் இயக்குகிறார்.
‘புலி’ படத்தின் சண்டை காட்சிகளை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக எடுத்து இருப்பதாக ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் தெரிவித்து உள்ளார். சண்டை காட்சிகள் மட்டுமே 84 நாட்கள் படமாக்கியுள்ளார்களாம்.