“project loon” என அழைக்கப்படும் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் கூகிள் பலூன் அதன் முதல் சோதனையை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், குறித்த பலூன்களில் ஒன்று புசல்லாவ பிரதேசத்தில் விழுந்துள்ளது.
இப்பரிசோதனையில் பயன்படுத்தப்பட இருக்கும் மூன்று பலூன்களில் ஒன்று இலங்கையின் தெற்குப் பகுதியினூடாக நேற்று முந்தினம் காலை இலங்கை வான்வெளியில் பிரவேசித்தது அனைவரும் அறிந்ததே.
விமானங்கள் பறப்பதை விட இரண்டு மடங்கு உயரமான வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத ஆகாயத்திலேயே நிலை கொண்டிருக்கும் குறித்த இந்த பலூன் நேற்று மாலையில் வான் வெளியில் பழுதடைந்து மலையகத்தின் புஸ்சல்லாவ பகுதியில் விழுந்துள்ளதாகவும், எராளமான மக்கள் அதனை காண அங்கு குவிந்துள்ளனர்.
மறுசுழற்சி செய்ய முடியுமான இந்த பலூன்கள் 180 நாட்கள் வரையிலான ஆயுளையே கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாராயினும்,தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தனது ட்விட்டர் தளத்தில், குறித்த கூகுள் பலூன் ஆனது பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


