இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக சிவப்புக்கொடி தூக்குகிறது ஜே.வி.பி

இந்தியாவுக்குமிடையில் கைச்சாத்திடப்படவுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு (எட்கா) உடன்படிக்கைக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பரப்புரையை முன்னெடுப்பதற்கு ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது.

குறித்த ஒப்பந்தம் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் ஆரம்பகட்ட நடவடிக்கை இன்று வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சிறப்புரையாற்றவுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை இந்தியாவுக்கு தாரைவார்க்கும் எட்கா வேண்டாம் என்ற தொனிப்பொருளிலேயே குறித்த பிரசாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.