யாராவது ஒரு ஊடகவியலாளரோ அல்லது ஊடக நிறுவனமொன்றோ தவறிழைத்துள்ளதாயின் குறித்த ஊடகவியலாளருக்கோ அல்லது ஊடக நிறுவனத்துக்கோ ஏசுவதையும், எச்சரிக்கை விடுப்பதையும் தவிர்த்து பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கு அரசாங்கம் பேச்சுவாத்தையில் ஈடுபட வேண்டும் என சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனை விடுத்து அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராக செயற்படுவதாயின், ஊடக அடக்கு முறையை அரசாங்கம் முன்னெடுக்கின்றதா? என்ற சந்தேகம் எழும் எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நவீன ஊடகங்களைக் கண்காணிப்புச் செய்வதற்கு சுயாதீன ஊடக அமைப்பொன்று இதுவரை உருவாக்கப்படாதுள்ளமை பாரிய குறைபாடாகவுள்ளதாகவும் அவ்வமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.
சில தனியார் ஊடகங்களின் செயற்பாடு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ எச்சரிக்கை விடுத்திருந்தார். தனியார் பத்திரிக்கை ஒன்றும் தனியார் தொலைகாட்சி ஒன்றும் தனக்கு எதிராக செயற்படுவதாக விசேட அறிக்கை ஒன்றின் மூலம் பிரதமர் குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது