இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்த வருடத்திற்குள்

இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்த வருடத்திற்குள்

ஒன்றுப்பட்ட இலங்கைக்குள் இந்த வருடத்துக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் முன்வைக்கபடும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

இதனையே தமிழ் முற்போக்கு கூட்டணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் கோரி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று இடம் பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

இந்த அரசாங்கத்தின் ஆட்சி காலப்பகுதியினுள், பிரிபடாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களையும், வளங்களையும் பகிர்ந்து கொள்ளும் சிறந்ததொரு எதிர்காலம் தமிழ் மக்களுக்கு ஏற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒரு சிலர், அடிப்படைவாதம், மதவாதம் மற்றும் இனவாதம் ஆகியவற்றை மையப்படுத்தி அரசியல் செய்து வருகின்றனர்.
அதற்கு ஒரு போதும் இடமளிக்க கூடாது என்றும் அமைச்சர் மனோ கணேஷன் வலியுறுத்தியுள்ளார்.