பெண் சாரதிகளுக்கும் கைக்கொடுக்கும் PickMe நிறுவனம்

ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் டக்ஸி கோரும் சேவையை உள்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய PickMe நிறுவனம் தனது மற்றுமொரு முயற்சியாக பெண்சாரதிகளுக்கும் கைகொடுக்க தீர்மானித்துள்ளது.

பெண்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு PickMe நிறுவனம் பெண் சாரதிகளை தனது வலைப்பின்னலில் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதுடன் தற்போது சுமார் 12 தொடக்கம் 15 வரையான பெண் சாரதிகள் சேவையாற்றி வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

PickMe நிறுவனத்தின் இப்புது முயற்சியை பற்றி கருத்து தெரிவித்த ரத்மலான அத்திடிய பிரதேசத்தில் வாழும் 33 வயதுடைய லஸந்தா தீப்தி கூருகையில் PickMe நிறுவனத்துடன் இணைந்ததன் மூலம் எனது வாழ்க்கையில் சமநிலையை பேணமுடிந்துள்ளதுடன் எனது வீட்டு வேலைகளையும் பிள்ளையின் கல்வி நடவடிக்கைகளையும் செய்து முடித்து எஞ்சியிருக்கும் நேரங்களில் PickMe மூலம் வழங்கப்படும் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் எனது பொருளாதார தேவைகளையும் பூர்த்திசெய்துக்கொள்ள முடிகின்றது என்றார்.

அவர் மேலும் கூறுகையில் இந்த தொழிலின் சுவாரசியமான விடயம் என்னவென்றால் எனக்கு 8 மணித்தியாலங்கள் கட்டாயமாக ஒரே தடவையில் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை மாறாக எனக்கு கிடைக்கும் இலவச நேரங்களில் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் எனது குடும்ப வாழ்க்கைக்கோ அல்லது ஏனைய வீட்டு வேலைகளுக்கோ எந்தவித இடையூறும் இன்றி எளிதாக முகாமைத்துவபடுத்திக்கொண்டு இந்த தொழிலை மேற்கொள்ளமுடியும் என்றார்.

தீப்தி மேலும் கூறுகையில் இன்றைய நவீன நூற்றாண்டில் பெண்களின் பாதுகாப்பு ஒரு கேள்விகுறியாக உள்ள நிலையில் PickMe மூலம் வழங்கப்படும் தற்பாதுகாப்பு முறைசார் விதிகள் சாரதிகளுக்கு மற்றுமல்லாமல் பயணிகளுக்கும் ஒரு பெரும் நம்பிக்கையை தந்துள்ளது என்றார்.

பயணிகள் மூலம் கோரப்படும் அனைத்து வேண்டுகோள்களும் நிறுவனம் மூலம் கணிணிகளில் பதியப்படுவதுடன் அவர்களுடைய போக்குவரத்து நடவடிக்கைகளையும் GPS மூலம் அவதனிக்கவும் முடியும். எனவே இது பயணிகள் தனியாக பயணிக்ககூடிய தன்னம்பிக்கையை ஒருபடி உயர்த்தியுள்ளதுடன் ஏதாவது அவசரநேரத்தின் போது எமக்கு வழங்கப்பட்டிருக்கும் Emergency பொத்தானை அழுத்துவதன் மூலம் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்புகொள்ள முடியும் என்றார்.

நிறுவனம் மூலம் வழங்கப்பட்டிருக்கும் சாரதி புள்ளி முறையைப் பற்றி தீப்தி கூறுகையில், இப்புள்ளி முறையின் ஊடாக பயணிகளுக்கு சாரதிகளை மதிப்பீடு செய்யமுடிவதுடன் இதன் மூலம் சாரதிகளின் இங்கிதம், கட்டுப்பாடு, பொறுமை போன்றவற்றை நிறுவனத்திற்கும் விளக்கமான முறையில் குறிப்பிடவும் முடியும். எனவே இம்முறை நிறுவனத்துக்கு சாரதிகளை மதிப்பீடு செய்வதற்கு உதவுவதோடு சாரதிகளை பற்றிய தெளிவையும் பயணிகளுக்கு வழங்கும் என்றார்.

PickMe நிறுவனம் தற்போது tuk, Mini Cab, மற்றும் Car ஆகியவற்றை குறைந்த, நடுத்தர, மேல்தர பிரிவுகளிள் வழங்குவதோடு எதிர்காலத்தில் இச்சேவைகளை மேலும் அதி உயர் தரத்திற்கு உயர்த்த முயற்சிகளை மேற்கொன்டு வருவதாக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் Jiffry Zulfer கருத்து தெரிவித்தார்.