டோனி, வீராட் கோஹ்லி இருவரில் யாரை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்ற கேள்விக்கு அஸ்வின் பதிலளிப்பது போன்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.
2016ம் ஆண்டு இந்தியாவின் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என்ற நோக்கில், தேர்தல் ஆணையம் மிகச்சிறப்பான முறையில் பிரசாரம் செய்து வருகிறது.
டுவிட்டரில் மீம்ஸ்கள், வீடியோக்கள் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்திய பந்துவீச்சாளர் அஸ்வினிடம், உங்களுக்கு பிடித்த வீரர் யார் கோஹ்லியா? டோனியா? என்று கேட்கப்படுகிறது.
இதற்கு பதிலளித்த அஸ்வின், ஆமா இதுதான் இந்த நாட்டுக்கு ரொம்ப முக்கியமான கேள்வி, நீங்க வேற வந்து இந்த லிங்கை கிளிக் பண்ணிட்டு இருக்கீங்க.
இந்த நாட்டுக்கு தேவையான கேள்வி எவ்வளவோ இருக்கு, அதெல்லாம் விட்டுட்டு இதை கேட்குறீங்க. முதல்ல வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா? ஓட்டு போட ரெஜிஸ்டர் பண்ணிட்டீங்களா? இந்த நாட்டை பத்தி யோசிங்க. டோனி, வீராட் பத்தி அவங்க அவங்க யோசிக்கிரூவாங்க ஓட்டு போடுங்க சார் போங்க என்று முடிகிறது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=uXusMS2zX00″ width=”560″ height=”315″]