எனவே மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு வீடியோவை யூடிப் சேனல் வைத்திருக்கும் கோபை பெர்சன் என்பவர் உருவாக்கியுள்ளார். 65-வயது முதியவரும் 12-வயது சிறுமியும் திருமண உடையில் நியூயார்க்கின் பரபரப்பான சாலையில் நடந்து சென்றால் மக்கள் என்ன செய்வார்கள் என்பது தான் கரு.
மக்கள் என்ன மாதிரியாக எதிர் வினையாற்றினார்கள் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள். மொழி ஒரு தடையாக இருக்காது.நியூயார்க் நகரவாசிகளின் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளும், அவர்களின் செயல்களுமே அனைத்தையும் சொல்லிவிடுகிறது.
பெங்களூரில் கல்லூரி மாணவி ஒருவரை காவல் நிலையத்திற்கு எதிரிலேயே பேருந்துக்குள் பூட்டியிருக்கிறார்கள். அந்த மாணவி சுமார் 45 நிமிடங்கள் கதறியபோதும், யாரும் உதவி செய்யவில்லை. எனவே இது போன்ற விழிப்புணர்வு வீடியோக்கள் நம் நாட்டிற்குதான் அதிகமாக தேவைப்படுகிறது.