இன்றைய போட்டியில் மலிங்க விளையாட மாட்டாராம் – மேத்யூஸ்

இலங்கை அணியின் டி20 அணித்தலைவர் மலிங்க காயத்தால் தொடர்ந்து அவதிப்படுக் கொண்டிருப்பதாக மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

ஆசியக்கிண்ணத் தொடரில் நேற்று நடந்த டி20 போட்டியில் இலங்கை- வங்கதேச அணிகள் மோதியது. இதில் வங்கதேசம் இலங்கை அணியை 23 ஓட்டங்களால் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் காயத்தால் அவதிப்பட்டு வரும் மலிங்க இடம்பெறவில்லை. இதனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலைவரான மேத்யூஸ் டி20 அணியை வழிநடத்தினார்.

போட்டி முடிந்த பிறகு மலிங்கவின் நிலை தொடர்பாக மேத்யூஸ் அளித்த பேட்டியில், “மலிங்கவை பற்றி உண்மையாக ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அவர் காயம் குணமடையாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனாலே அவர் இன்றையப் போட்டியில் ஆடவில்லை. அவருக்கு சிரமம் கொடுக்க வேண்டாம் என்று அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இதேபோல் அடுத்த இரண்டுப் போட்டியிலும் அவர் இடம்பெறுவார் என்று கண்டிப்பாக கூற முடியாது. இதனால் அணியில் இருப்பவர்களை வைத்து சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.