இலங்கைக்கெதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான நேற்றைய போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட் இழப்பிற்கு 138 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்​கை அணி சார்பாக கப்புகெதர அதிகபட்சமாக 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக அஷ்வின் 26 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

இந்திய அணி சார்பாக யுவராஜ் சிங் 35 ஓட்டங்களையும் விராட் கோலி ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் பெற்றனர்.