இலங்கையின் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய சி.சி.டி.வி காட்சிகளை அடையாளங் காணும் செயற்பாட்டிற்கு கனடாவில் அமைந்துள்ள பிரிட்டிஸ் கொலம்பியா நிறுவனத்தின் சேவையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இதற்கு முதல் குறித்த சி.சி.டி.வி காட்சிகளை அடையாளங் காண்பதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணணிப்பிரிவிற்கு ஒப்படைத்திருந்த நிலையில் , குறித்த காட்சியில் உள்ள நபர்களை அடையாளங் காண்பதற்கு வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை நாட வேண்டும் என அவர்கள் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.