அரச நிறுவனங்களின் பணியாளர்கள் முறையாக தமது கடமைகளை மேற்கொள்கின்றனரா? என்பது குறித்து அறிவதற்காக, திடீர் சோதனை அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.
அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்னும், அரச நிறுவன அரச பணியாளர்கள் பலர் தங்களின் கடமை நேரத்தில் உரிய கடமைகளை புறக்கணித்து அசட்டுத்தனமாய் இருந்து வருவதாக முறைபாடுகள் எழுந்துள்ளன.
குறித்த செயலினால் அதிகளவு பொது மக்களே பாதிக்கப்படுகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் இந்த திடீர் சோதனை அதிகாரிகள் குழு விரைவில் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.