வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரஸ்சலுக்கு தடை..?

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்சல். இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறையை மீறியுள்ளார். ஊக்கமருந்து தடுப்பின் கீழ் எங்கு இருக்கிறார் என்ற விதிமுறையை ரஸ்சல் மீறி இருக்கிறார்.

இதனால் அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதிக்கும் என்று தெரிகிறது. ரஸ்சல் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.