வெலிக்கட சிறைச்சாலை புதிய இடத்திற்கு

மேற்கு நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வெலிக்கட சிறைச்சாலையானது குறித்த இடத்திலிருந்து அகற்றப்பட திட்டமிடப்படுவதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் குறிப்பிட்டதாவது;

சிறைச்சாலையை அண்மித்த பிரதேசத்தையொட்டி வீடமைப்புத் திட்டமொன்று ஆரம்பிக்கவுள்ளதாலேயே இக்குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இன்னும், “தற்போதைக்கு இக்குறித்த சிறைச்சாலையினை இங்கிருந்து அகற்ற உள்ளோம். குறித்த சிறைச்சாலை இடம்,ரயில்வே துறைக்குச் சொந்தமான இடம் மற்றும் அதற்கு அண்டிய காணிகளை உள்ளடங்களாகக் கொண்டு உயர்தர வர்க்கத்திலான அடுக்குமாடிய்த் தொடர்களை அமைப்பதே இக்குறித்த திட்டத்தின் நோக்காகும்.

கொழும்பு 7ஆன பொரல்ல இனை மையமாகக் கொண்டு எமது திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். இறுதிப் பத்து வருடங்களை நோக்குவோமாயின் நாட்டிலுள்ள மக்கள் சுமாராக ரூபா. இரண்டு இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம் கடன்பட்டுள்ளார்கள்.

இங்குள்ள அபிவிருத்திகள், செப்பனிட்ட பாதைகள் மற்றும் கட்டுமானங்களால் குறித்த இரண்டு இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம் ரூபாவினை திருப்பி அளிக்கமுடியுமா” எனவும் அமைச்சர் இதன் போது வினவியுள்ளார்.