ஆசியக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி தோற்க்க காரணமே இலங்கை பயிற்றுவிப்பாளரே

பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி நாளை(௦6) நடைபெறவுள்ளது.

இந்திய இதுவரை தாம் போட்டியிட்ட நான்கு  போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், பங்களாதேஷ் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இக்குறித்த பங்களாதேஷ் அணியினது பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுபவர் இலங்கை பயிற்றுவிப்பாளரில் ஒருவரான சந்திக்க ஹத்துருசிங்க என்பவராவார்.

2014 பங்களாதேஷ் அணிக்கான பயிற்றுவிப்பாளராக பதவியினை பொறுப்பேற்ற வருடத்திலேயே சிம்பாபே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளில் 5 போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் போட்டியில் 5/0 எனும் கணக்கில் வெற்றி அடைந்த அதேநேரம், 2015 வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டியில் அரை இறுதிச் சுற்றுக்கும் பங்களாதேஷ் அணியினை அலைத்துச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆசியக் கிண்ண போட்டியில் இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 23புள்ளிகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் வெற்றியடைந்ததை அடுத்து அந்நாட்டு ஊடகங்களால் ஹத்துருசிங்க குறித்து  அதிகளவு பேசப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

“இலங்கைக்கு அவசியமற்ற மனிதனாக இருந்தாலும் அவர் நமக்கு அவசியமானவராகவே காணப்படுகிறார். சந்திக்க ஹத்துருசிங்க பங்களாதேஷ் நாயனாகும் தினம் வெகுதூரத்தில் இல்லை”

எனவும் குறித்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.