ஐ.ம.சு.கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நாளைய தினம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் நாளை இரவு 8.00 மணிக்கு இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக கடமையாற்றி வந்த பேராசிரியர் விஸ்வா வர்ணபால காலமானதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு பொருத்தமான ஒருவரை நியமித்தல் குறித்து கூட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் கூட்டமைப்பை மறுசீரமைப்பது குறித்து கலந்துரையாடல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையிலேயே குறித்த கூட்டம் நடத்தப்பட உள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு ஓராண்டுக்கு முன்னதாகவே இறுதியாக கூடியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பில் நிலவி வரும் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு, சில கூட்டணி கட்சிகள் கடந்த வாரம் ஜனாதிபதியிடம் கோரியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.