நேபாளத்தில் இன்று மீண்டும் நில அதிர்வு

நேபாளத்தில் கடந்த ஐந்து வாரங்களுக்கு முன் நிகழ்ந்த நிலநடுக்கம் 9 ஆயிரம் மக்களை பலிகொண்ட நிலையில், தொடர்ந்து அங்கு நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றும் அங்கு 4 ரிச்டர்  அளவு கொண்ட நில அதிர்வு ஏற்பட்டது.

முந்தைய நிலநடுக்கத்தில் 8 ஆயிரம் பள்ளிகள், 25 ஆயிரம் வகுப்பறைகள் சேதமடைந்துள்ள நிலையில், நேற்று மீண்டும் அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. வெட்டவெளியிலும், மூங்கில், மரம் மற்றும் தார்பாய்கள் மூலம் உருவாக்கப்பட்ட தற்காலிக குடில்களிலும் மாணவர்கள் கல்வி கற்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் அங்கு நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை தொடர்ந்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது.