போதைப்பொருள் பயன்பாட்டில் சிக்கிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா (VIDEO)

ரஷ்யா டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து அவர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா இதுவரை 5 முறை கிராம் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவருக்கு போதைப் பொருள் சோதனை நடத்தப்பட்டது.

அதில் அவர் விதிமுறைகளுக்கு எதிரான அளவுக்கு அதிகமாக மெக்னீசியம் எடுத்துக் கொண்டது கண்டறியப்பட்டுள்ளது.

தவிர, கடந்த 10 வருடங்களாக அவர் போதைப் பொருள் பயன்படுத்தி வந்துள்ளார் என்பதும் சோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஷரபோவா டென்னிஸ் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக மார்ச் 12ம் திகதி வரை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மரியா ஷரபோவா கூறுகையில், ”நான் என்னுடைய ரசிகர்களையும், விளையாட்டினையும் தலைகுனிய வைத்துவிட்டேன். ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன். இதற்கு நான் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

இத்துடன் எனது டென்னிஸ் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பவில்லை. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இவருடன் சேர்த்து இதுவரை இந்த மாதத்தில் மட்டும் போதைப் பொருள் சோதனையில் 7 பேர் சிக்கியுள்ளனர்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=vPraj90kcIg” width=”560″ height=”315″]