இன்டர்போல் உதவியுடன் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக சிவப்பு பிடிவிராந்து

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் சிவப்பு பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த இருபது பாதாள உலகக்குழு உறுப்பினர்களையும் கைது செய்யும் நோக்கிலேயே இவ்வாறு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்னும், போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர்கள் பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை ஐஸ் மஞ்சு என்பவரும் இதில் அடங்குகின்றார். நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தங்கியிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த நாடுகளின் பொலிஸார் பாதாள உலகக்குழு செயற்பாட்டாளர்கள் தொடர்பில் அதிக கரிசனை காட்டுவதில்லை எனவும் புகலிடக் கோரிக்கையாளர் பிரச்சினையே அந்த நாடுகளில் முதன்மையானது எனவும் ஊடகமொன்று மேற்கோற்காட்டி சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இலங்கையின் அதிகளவான பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இத்தாலியில் மறைந்து வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.