காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்கள் இன்று(09) விசாரணைக்கு எடுத்து ஆராயப்படவுள்ளது.
எல்லே குணவங்ச தேரர் மற்றும் பேராசிரியர் காலோ பொன்சேகா ஆகியோரால் குறித்த இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவானது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள அரசாங்க நிறுவனம் எனக் கூறி தடை செய்யுமாறு இந்தக் குறித்த மனுக்களில் கோரப்பட்டுள்ளது.