AIDS நோயென சந்தேகித்த மாணவனுக்கு கண்டி திருத்துவ கல்லூரியில் இணைந்துகொள்ள உடன்படிக்கை கைச்சாத்து

எயிட்ஸ் நோயினால் தந்தை உயிரிழந்ததை அடுத்து, AIDS என சந்தேகிக்கப்பட்டு பாடசாலை கல்வியை இழந்த குளியாபிட்டிய மாணவனை கண்டி திருத்துவ கல்லூரியில் இணைந்துகொள்வது தொடர்பில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் பாடசாலை அதிபருக்கு இடையில் இந்தக் குறித்த  உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.