இந்­தி­யாவில் நேற்று ஆரம்­ப­மான 6ஆவது இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்­டி­களில் ஆப்­கா­னிஸ்தான் மற்றும் சிம்­பாப்வே அணிகள் வெற்­றி­பெற்­றன.

நேற்­றைய முதல் போட்­டியில் மோதிய சிம்­பாப்வே மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கு இடையிலான போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய சிம்­பாப்­வேயின் சிபான்டா 59 ஓட்டங்களையும், சிகும்­புரா ஆட்­ட­மி­ழக்­காமல் 30 ஓட்­டங்­க­ளையும் எடுக்க, நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 158 ஓட்­டங்­களை சேர்த்­தது.

பின்னர் 159 ஓட்­டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் கள­மி­றங்­கிய ஹொங்கொங் அணியால் நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 144 ஓட்­டங்­களை மட்­டுமே எடுக்க முடிந்­தது. இதனால் சிம்­பாப்வே அணி 14 ஓட்­டங்­களால் வெற்றி பெற்­றது.

நேற்­றைய இரண்­டா­வது போட்­டியில் ஆப்­கா­னிஸ்தான் மற்றும் ஸ்கொட்­லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஆப்கான், 20 ஓவர்­களில் 5 விக்கட்களை இழந்து 170 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. இதில் மொஹமட் 61 ஓட்­டங்­களைப் பெற்றார்.

பதி­லுக்கு ஆடிய ஸ்கொட்­லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 156 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.