T20 உலககிண்ணம் – இலங்கை அணி ஆசிகளுடன் இந்தியா பயணம்

இருபதுக்கு இருபது  உலகக்கிண்ணப் போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கைக் கிரிக்கட் அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் கலந்து கொள்ள இலங்கை கிரிக்கட் அணி இன்று புறப்பட்டுச் செல்கின்றது.

இதற்காக அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வைபவம் ஒன்று கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இலங்கைக் கிரிக்கட் அணிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

 

SL-cricket

SL-cricket-team

SL-Team.

SL-TEAM-GOES-INDIA

(riz)