குறித்த நான்கு பேரையும் எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா இன்று உத்தரவிட்டுள்ளார்.
இன்னும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனால் பிணைமனு கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்ட மனுவிற்கான விசாரணை எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று சிவநேசதுரை சந்திரகாந்தனை கைதுசெய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.