பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடையுத்தரவு (UPDATE)

பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடையுத்தரவு (UPDATE)

திவி நெகும திணைக்கள பண மோசடி குறித்த வழக்கிற்கு ஆஜராகியிருந்த பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திவி நெகும வழக்கிற்கு பசில் ராஜபக்ஷ நீதிமன்றில்

திவி நெகும திணைக்கள பண மோசடி குறித்து கொழும்பு உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிற்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று(10) காலை நீதிமன்றிற்கு ஆஜராகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

திவி நெகும திணைக்களத்தின் மில்லியன் 26இற்கு அதிக பணம் முறையற்ற விதத்தில் கையாளல் குறித்த குற்றச்சாட்டின் பெயரிலேயே முன்னாள் அமைச்சர் மற்றும் குறித்த திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜெனெரல் ஆர்.கே.ரணவக இற்கு எதிராகவும் நீதிபதியினால் நீதிமன்றில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.