போட்சிட்டிக்கு மீண்டும் அமைச்சரவை அங்கீகாரம்

சீனாவின் நிர்மாணமான போட்சிட்டி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று(1௦) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைத்ததாக சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் சீனாவிற்கு சென்று அதிகாரிகள் மட்ட பேச்சுக்களை நடத்தியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.