நெல் மற்றும் அரிசிக்கு நிர்ணய விலை கோரி அடிப்படை உரிமை மீறல் மனு

 

நெல் மற்றும் அரிசிக்கு நிர்ணய விலை இல்லாத காரணத்தினால் விவசாயிகளினதும், கொள்முதல் செய்வோரினதும் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கூறி இன்று(11) உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம், அரிசி தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை சிறு மற்றும் பெரிய ஆலை உரிமையாளர்கள் சங்கம் போன்றன மனுதாரர்களின் பிரதிநிதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், சட்டத்தரணி சுனில் வடலக, ஜானக அதிகாரி ஆகியோர் குறித்த மனுவுக்கு முன்னிலையாகியுள்ளனர்.

நெற்களஞ்சியங்களில் குறிக்கப்படும் விலைகளுக்கு மாறாக நுகர்வோர் அதிகாரசபையினால் குறித்த விலையின்றி ஒவ்வொரு விலைக்கும் விதவிதமான நிர்ணய விலைகளால்; விவசாயிகள், கொள்வனவாளர்கள் அதேபோன்று நெற்களஞ்சியசாலை உரிமையாளர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் குறித்த மனுவில் மேலும் குறிக்கப்பட்டுள்ளது.