தங்கொட்டுவை பிரதேசத்தில் வான் ஒன்றுக்குள் எரியூட்டப்பட்ட நிலையில் 5 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள், குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில், பாதாள உலகக் கோஷ்டியினரின் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவி வருகின்ற நிலையில், பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் ஆலோசனைக்கு அமைய, இந்த விசாரணைகள் சீ.ஐ.டீ.யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
(riz)